வலிமார்கள் வாழ்வினிலே

அன்னை நஃபிஸா ரழியல்லாஹு        தஆலா அன்ஹா 

ஸய்யிதுனா_இமாம்_ஹஸன்_ரழியல்லாஹு_அன்ஹு_அவர்களின்_கொள்ளுப்_பேத்தியும்
ஸய்யிதுனா_இமாம்_ஜஃபர்_ஸாதிக்_நாயகம்_ரழியல்லாஹு_அன்ஹு_மருமகளாருமான
ஞானக்_கருவூலம்_காரணப்_பெருங்கடல்_அஸ்ஸய்யிதாநஃபிஸா_அல்_தாஹிராரழியல்லாஹூ_அன்ஹா_
புனித_உரூஸ்முபாரக்_ரமழான்_15

இவர்கள் அஸ்ஸய்யித் அல் ஹஸன் அல் அன்வர் பின் ஜைத் அல் அப்லஜ் பின் இமாம் ஹஸன்
(ரிழ்வானுல்லாஹி தஆலா அலைஹிம்) மகள் ஆவார்கள்.

மற்றும் ஸய்யிதுனா இமாம் ஜஃபர் ஸாதிக் நாயகம் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் மகனார் ஸய்யிதுனா இஸ்ஹாக் அல்முஃதமின் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் மனைவியும் ஆவார்கள்.

ஞானப் பெருங்கடலான அன்னை நஃபிஸா ரழியல்லாஹு தஆலா அன்ஹா இமாம் ஷாஃபிஈ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் ஆசிரியையும் ஆவார்கள். மற்றும் பொருளாதார ரீதியில் அவர்களுக்கு அனுசரணையும் அளித்தவர்கள் அன்னை.

இமாம் ஷாபிஈ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் அன்னையிடத்தில் பல ஹதீஸ்களையும், மார்க்கப் பாடங்களையும் கற்று உள்ளார்கள்.

அஹ்லுல் பைத்தினரிடத்திலும், அன்னையிடத்திலும் மிகப் பெரும் கண்ணியமும், நேசமும் கொண்டிருந்த இமாம் ஷாஃபிஈ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள், தன்னுடைய இறுதி வேளை நெருங்கியதை அறிந்தவுடன், "தான் மரணித்தவுடன் தன்னுடைய ஜனாஸாவை அன்னை அவர்களிடத்தில் எடுத்துச் சென்று அவர்களின் துஆவைப் பெற்ற பிறகே அடக்க வேண்டும்" என்று வஸிய்யத் எழுதி வைத்துவிட்டு இவ்வுலகை விட்டு மறைந்தார்கள். அவர்களின் வஸிய்யத் படியே அவர்களின் பூதவுடல் அன்னையவர்களின் இடத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, அன்னை அவர்களால் பிரார்த்தனை செய்யப்பட்ட உடன் தான் அடக்கம் செய்யப்பட்டது.

இமாம் ஷாபிஈ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களைப் போன்று பல்லாயிரம் மாணவர்களுக்கு கல்வியும் ஞானமும் போதித்த மிகப் பெரும் ஞான சமுத்திரம்.

மூன்று நாட்களுக்கு ஒரு முறை உணவு உண்ணும் ஓர் எளிமையான வாழ்க்கை வாழ்ந்த அன்னையவர்கள், தன்னிடத்தில் இருந்த வெறும் பாத்திரத்தில் கைவிட்டு அல்லாஹ்வின் புறத்திலிருந்து அளிக்கப்பட்ட உணவைப் புசிப்பவர்களாக இருந்தார்கள்.

#ஞானப்_பெருங்கடலான_அன்னையவர்கள்_மிகப்_பெரும்_காரணக்_கடலாகவும்_உள்ளார்கள்.

இறை நாட்டத்துடன் பார்வையற்ற சிறுமிக்கு பார்வையை அளித்தது, மூழ்கிய கப்பலை வெளியே கொண்டு வந்தது, ஒரு வருடம் ஓடாது இருந்த  நதியை ஓட வைத்தது என்று அன்னையவர்களின் கராமாத்துகள் 150க்கு மேல் வரலாற்றாசிரியர்களால் பதியப்பட்டுள்ளன.

பக்கத்து வீட்டு சகோதர சமுதாயத்தைச் சேர்ந்த சகோதரி கடைவீதிக்குச் செல்வதற்காகத் தன் பிள்ளையை அன்னையிடத்தில் விட்டு விட்டுச் சென்றார்.

அவர் பிள்ளையை விட்டுச் சென்ற பிறகு அன்னையவர்கள் தொழுவதற்காக உளு செய்த பொழுது, சில நீர் துளிகள் அந்தக் குழந்தையின் மீது பட்டன.

பிறகு அன்னை அவர்கள் தொழ ஆரம்பித்தார்கள். தொழ ஆரம்பித்த சிறிது நேரத்தில் #முடக்கு_வாதத்தால்_முடக்கப்பட்டிருந்த_அக்_குழந்தை_பூரண_சுகம்_ஆகி_அசைய_ஆரம்பித்தது.
அந்நேரம் அக்குழந்தையின் அன்னை திரும்ப வந்த பொழுது, அக்குழந்தை ஓடிச்சென்று அன்னையிடத்தில் அடைக்கலம் புகுந்தது.

அன்னையவர்களின் இன்திகாலுக்குப் பின் ஓர் இரவு நேரத்தில் அன்னையவர்களின் ரவுழா ஷரீஃபிற்குள் புகுந்த திருடர்கள், 17 வெள்ளி விளக்குகளைத் திருடிக் கொண்டு வெளியே செல்ல முயன்றனர். அவர்கள் வெளியே செல்வதற்கு எந்தக் கதவும் அவர்கள் கண்களுக்குத் தெரியவில்லை.
இந்த நிலை விடியும் வரை நீடித்தது. விடிந்த பின் மாட்டிக் கொண்ட திருடர்களை மக்கள் பிடித்து சிறையில் அடைத்தனர் என்ற சரித்திரம் உண்டு.

அன்னையவர்களின் பிரார்த்தனையை வேண்டி அலையலையாய் மக்கள் வந்ததால் இபாதத் செய்வதற்குரிய நேரம் கிடைக்காது போனதால், அன்னையவர்கள் கெய்ரோவை விட்டு வேறு இடத்திற்குச் செல்ல நாடிய போது , கெய்ரோவின் கவர்னர் அஸ்ஸிர்ரி இப்னு அல் ஹக்கம் மற்றும் கெய்ரோவின் மக்கள் வேண்டி விரும்பி கேட்டுக் கொண்டதால் தம் முடிவை மாற்றிக் கொண்டு கெய்ரோவிலேயே தங்குவதற்கு சம்மதித்தனர்.

ஹிஜ்ரி 145 இல் மக்கா முகர்ரமாவில் பிறந்து, திருமணத்திற்குப் பின் கணவருடன் எகிப்திற்குச் சென்று ஹிஜ்ரி 208 இல் இவ்வுலகை விட்டு மாறிய அன்னையின் புனித ரவுழா ஷரீஃப் கெய்ரோவில் உள்ளது.

Ehsan Iqbal Qadiri அறிஞர் இஹ்ஸான் இக்பால் காதிரி ஹஃபிதஹூல்லாஹ் அவர்கள் தங்களது முகநூல் பக்கத்தில் கீழ்க்கண்ட செய்தியை நேற்று பதிந்துள்ளார்கள்.

5 வயதில் குர்ஆன் ஷரீஃபை மனனம் செய்து, 30 தடவைகள் கால்நடையாக ஹஜ் செய்த அன்னையவர்கள், தனக்கான கப்ர் ஷரீஃபைத் தானே தோண்டி அந்தப் புனித கப்ர் ஷரீஃபில் 6 ஆயிரம் தடவை குர்ஆன் ஓதியுள்ளார்கள்.

அவர்களுடைய புனித மக்பரா ஷரீஃபில் கீழ்க்கண்டவாறு எழுதப்பட்டுள்ளது.

வாழ்க்கையில் தீராப் பிரச்சினைகளைச் சந்திப்பவர்கள், அன்னை அவர்களுடைய மக்பராவில் வந்து நின்று,
#ஸூரா_ஃபாத்திஹா
#ஸூரா_அல்_ஆலா
#ஸூரா_இக்லாஸ்
#ஸூரா_ஃபலக்
#ஸூரா_நாஸ்
ஓதி அன்னை அவர்களுக்குக் காணிக்கை செலுத்தினால் நிச்சயம் அல்லாஹு வஜல் அந்தப் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பான்.

அன்னை அவர்களது பொருட்டால் நம் துன்ப துயரங்களை நீக்கி, நோய் தொற்றுகள், பலாய் முஸீபத்துகள், பஞ்சம் பசி பட்டினிகளிலிருந்து எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாத்து, நம் அனைவருக்கும் நல்லருள் புரிவானாக! ஆமீன்!! 

Comments

Popular posts from this blog

அண்ணலாரின் முன்னறிவிப்பு