வலிமார்கள்வாழ்வினிலே


         உண்மையான இபாதாத் எது?   

ஒரு தடவை
இறைநேசப் பெண்மணி
ராபிஅத்துல்
பஸரிய்யா(ரஹ்)
அவர்கள்

ஒரு கையில்
தீப்பந்தத்தையும்
மறு கையில்
தண்ணீர் வாளியையும்
தூக்கிக் கொண்டு
ஓடினார்கள்.

மக்கள்
எங்கே செல்கிறீர்கள்..?
என கேட்டார்கள்.

"சுவர்க்கத்தை
எரிக்கப் போகிறேன்
நரகத்தை
அணைக்கப் போகிறேன்..!"
என்றார்கள்.

"அன்னையே!
எங்களுக்குப்
புரியவில்லையே?"
என மக்கள்
சொன்னதும்.

"எல்லா
முஸ்லிம்களின்
மன நிலையை
அல்லாஹ் எனக்கு
காட்டித் தருகிறான்!"

"ஒரு கூட்டம்
சுவனத்தை
அடைய வேண்டும்
என்ற எண்ணத்திலேயே
இபாதத்
செய்கிறார்கள்!"

"ஒரு கூட்டம்
நரகத்தைப் பயந்து
இபாதத்
செய்கிறார்கள்!"

"எந்த முஸ்லிமும்
அல்லாஹுக்கு
பயந்து....
அல்லாஹ்வை
அடைய வேண்டும்
என்ற ஆசையில்
இபாதத்
செய்யவில்லையே..!"
என கவலையோடு
சொன்னார்களாம்.

Comments

Popular posts from this blog

அண்ணலாரின் முன்னறிவிப்பு